எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் விமானங்களில் நவீன ரேடார் அமைக்கும் டிஆர்டிஒ..

0 1721
சீனா, பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வகையில், இந்திய விமானப்படையின் 6 விமானங்களில் பொருத்துவதற்னான நவீன கருவிகளை டிஆர்டிஒ தயாரிக்க இருக்கிறது.

சீனா, பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வகையில், இந்திய விமானப்படையின் 6 விமானங்களில் பொருத்துவதற்னான நவீன கருவிகளை டிஆர்டிஒ தயாரிக்க இருக்கிறது.

உள்நாட்டில் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்பட உள்ளது. 6 விமானங்களில் 360 டிகிரி கோணத்தில் கண்காணிப்பில் ஈடுபடும் விதத்தில் நவீன ரேடார் உள்ளிட்ட கருவிகள் அமைக்கப்பட இருக்கின்றன.

10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்திற்கு, பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, ஏற்கனவே 6 ஏர்பஸ் 330 விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டு இருந்ததை இந்திய விமானப்படை கைவிடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments