நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போதும் தொடர்கின்றன - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 5408
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்த உடன் தமிழகத்தில் இலவசமாக விநியோகம் தொடங்கும்.

கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 118 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, 627 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 35 கோடி ரூபாய் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார். தொடர்ந்து மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினருடனான கலந்துரையாடலிலும் முதலமைச்சர் பங்கேற்றார்.

நிறைவாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், கொரனோ தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டால் தமிழக மக்களுக்கு இலவசமாக செலுத்தப்படும் என்றார். வேளாண் திருத்தச் சட்டங்களால் வடமாநிலங்களில் உள்ள இடைத்தரகர்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்றும் எனவே அந்த சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் முதலமைச்சர் கூறினார்.

அதிமுக தலைமையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். தேர்தல் நெருங்குவதால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படவுள்ளதாக எதிர்கட்சிகள் பொய் பரப்பி வருகின்றன என்றும், விவசாயிகளுக்கு அரசு தொடர்ந்து இலவச மின்சாரத்தை வழங்கும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments