திமுக - மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தையா? - கமல் - உதயநிதி சந்தித்து பேசியதாக தகவல்

திமுக - மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக, தகவல் வெளியாகியுள்ளது.
திமுக - மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக, தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தரப்பில், தோழமை கட்சிகளுடன், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்வதாக, சொல்லப்படுகிறது. இந்தச்சூழலில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை, இருவேறு இடங்களில் வைத்து சந்தித்துப் பேசியதாகவும், தொகுதிப் பங்கீடு பேச்சு நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், திமுக தரப்பிலும், உதயநிதி ஸ்டாலின் தரப்பிலும் இந்த தகவலில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுகவும், கமலும் தற்போது பலவீனமாகிவிட்டதால் ஒன்றாக சேர்ந்து அதிமுகவிடம் மோத நினைப்பதாக கூறினார்.
Comments