ரஜினியோடு கூட்டணி அமைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர்? கமல் பதில்

வரும் சட்டமன்ற தேர்தலில் தனது தலைமையில் மூன்றாவது அணி கட்டாயம் அமையும் என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்தார்.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில், ரஜினியோடு கூட்டணி அமைந்தால், யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்விக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
"சீரமைப்போம் தமிழகத்தை" என்ற தலைப்பில், தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ள கமல், திருநெல்வேலியில், இளையோரையும், பெண்களையும் சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கமல், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில், தாம் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பரப்புரை கலந்துரையாடலை, நாகர்கோவிலில் நிகழ்த்திய கமல்ஹாசன், தமது தலைமையில் மூன்றாவது அணி கட்டாயம் அமையும் என்றார்.
Comments