மேம்பாலத்திற்கு கீழ் சிக்கிய பிரம்மாண்டமான மின்மாற்றியை ஏற்றி வந்த கனரக லாரி

சென்னை பூந்தமல்லி - மதுரவாயல் புறவழிச்சாலையிலுள்ள இரட்டைப் பாலத்தின் கீழ் பிரம்மாண்டமான மின்மாற்றியுடன் வந்து சிக்கிக்கொண்ட லாரியை அகற்ற பல மணி நேரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை பூந்தமல்லி - மதுரவாயல் புறவழிச்சாலையிலுள்ள இரட்டைப் பாலத்தின் கீழ் பிரம்மாண்டமான மின்மாற்றியுடன் வந்து சிக்கிக்கொண்ட லாரியை அகற்ற பல மணி நேரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை துறைமுகத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு அதிக திறன் கொண்ட மின்மாற்றி ஒன்று கனரக லாரியில் கொண்டு செல்லப்படுகிறது.
மதுரவாயல் அருகேயுள்ள இரட்டை மேம்பாலத்தின் கீழ் நுழைந்து செல்ல முயன்றபோது, உயரம் காரணமாக லாரியில் இருந்த மின்மாற்றி பாலத்தின் அடியில் சிக்கிகொண்டது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு வருகின்றன. தொடர்ந்து லாரியை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
Comments