4 மாதங்களில் 29,400 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய அமேசான் தலைவரின் முன்னாள் மனைவி

0 2137

அமேசான் தலைவர் ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் 4 மாதங்களில் 29 ஆயிரத்து நானூறு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட் கடந்த ஆண்டு பிரிந்து சென்றார். அமேசான் நிறுவனத்தில் மெக்கன்சிக்கு உள்ள பங்குகளின் மூலம் அவரது சொத்து மதிப்பு 4 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

இதனால் உலகின் 18ஆவது பணக்காரராகவும், உலக அளவில் பெண்களில் மூன்றாவது பணக்காரராகவும் விளங்குகிறார். சொத்துமதிப்பு உயர்ந்து வரும் அதேநேரத்தில் அவர் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பதிலும் வள்ளலாகத் திகழ்கிறார்.

ஏற்கெனவே ஜூலை மாதத்தில் 12 ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருந்தார்.

இந்நிலையில் அடுத்த 4 மாதங்களில் மீண்டும் 29 ஆயிரத்து 400 கோடி ரூபாயை 384 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். கல்வி, ஏழை எளிய மக்களின் மேம்பாடு ஆகியவற்றுக்காக இந்த நிதி செலவிடப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments