செருப்பு தைப்பது எப்படி? - கேட்டறிந்த சேலம் எம்.பி.!

0 15098

சேலம் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் பொதுமக்களின் குறைகளைக் கேட்கச் சென்றபோது, சாலையோரம் செருப்பு தைக்கும் தொழிலாளர்களுடன் அமர்ந்து, செருப்பு தைக்க முயற்சித்தபடி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரை தனியார் திருமண மண்டபத்தில் போர்வெல் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் இதில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் கலந்துகொண்டார்.‘ தொடர்ந்து, தாண்டவராயபுரத்தில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளை நேரில் சந்தித்தார். அவர்களுடன் பேசி விவசாயிகளின் குறைகளைக் கேட்டு அறிந்துகொண்டார்.

பிறகு, ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே சாலையோர கூலித் தொழிலாளர்களிடம் பேசி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது சாலையோரம் செருப்பு தைத்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளிகளிடம் சென்றவர், யாரும் எதிர்பாராத வகையில், அவர்களுடன் அமர்ந்து குறைகளைக் கேட்டறிந்தார். பிறகு, செருப்பு தைப்பது எப்படி என்பது குறித்து அவர்களிடத்தில் கேட்டறிந்தார். அப்போது, அங்கிருந்த செருப்பு ஒன்றை எடுத்துத் தைக்கவும் முயற்சி செய்தார். எம்.பி ஒருவர் தங்களுடன் அமர்ந்து சிறிது நேரம் பேசியது செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த தொழிலாளர்களிடத்தில் “உங்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்துகொடுப்போம்” என்று கூறிய பார்த்திபன் தான் கொண்டுவந்த வேட்டிகளை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments