பாடலாசிரியர் வைரமுத்து இருதய நோய் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதி

0 41333

சென்னை தனியார் மருத்துவமனையில்  இன்று காலை அனுமதிக்கப்பட்ட கவிஞர் வைரமுத்து, அங்கிருந்து வீடு திரும்பினார்.

ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை அவர் திடீரென சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.  இதையடுத்து இருதயநோய் பிரச்சினை சிகிச்சைக்கு அவர் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இருப்பினும் வழக்கமான பரிசோதனைக்காகவே வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சுமார் அரைமணி நேரத்தில் பரிசோதனை முடிந்து பெசன்ட்நகரிலுள்ள வீட்டுக்கு திரும்பி விட்டதாகவும் அவரது மேலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments