தமிழகத்தில் அரசியல் கூட்டங்களுக்கு வரும் 19-ம் தேதி முதல் அனுமதி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் திறந்தவெளியின் அளவுக்கேற்ப 50 சதவீத பங்கேற்பாளர்களுடன் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை 19ம் தேதி முதல் நடத்த அனுமதியளிக்கபடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, திறந்தவெளி அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வண்ணம் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu CM Edappadi K Palaniswami to grant permission to conduct political, public meetings, religious gatherings, sports & cultural events with a maximum of 50% capacity in open places from Dec 19.
— ANI (@ANI) December 16, 2020
There should be prior permission from district administration to conduct them
Comments