ஆந்திரா, தெலுங்கானா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்ய கொலிஜீயம் குழு ஒப்புதல்

0 731

ஆந்திரா, தெலுங்கானா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்ய கொலிஜீயம் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டியின் புகாரையடுத்து சில நீதிபதிகளை மாற்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி எழுதிய கடிதத்தில் நீதிபதிகள் நடுநிலையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து நீண்ட ஆலோசனைக்குப் பிறகு நேற்று கொலீஜியம் தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இது தொடர்பான மத்திய அரசின் உத்தரவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments