டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் வாபஸ்... கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக நிர்வாகம் ஒப்புதல்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் 2 நாட்களுக்குப் பிறகு, தங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
மருத்துவமனை நிர்வாகத்துடன் நடைபெற்ற இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அவர்கள் பணிக்கு திரும்பினர். ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கடந்த திங்கட்கிழமை முதல் எய்ம்ஸ் செவிலியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.
ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிக்கு வராததால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Comments