குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து: காவல் உதவி ஆணையர் மகன் மீது வழக்கு..!
சென்னையில் சாலைத் தடுப்பில் மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில், கோயம்பேடு காவல் உதவி ஆணையர் ஜெயராமன் மகன் மீது குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் சாலைத் தடுப்பில் மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில், கோயம்பேடு காவல் உதவி ஆணையர் ஜெயராமன் மகன் மீது குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய கைலாஷ் அருகே கோட்டூர்புரம் செல்லும் சாலையில் இன்று அதிகாலை கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வந்து மோதி கவிழ்ந்தது.
காரில் சிக்கியிருந்த 3 இளைஞர்களை மீட்டு போலீசார் விசாரித்தபோது, காரை உதவி ஆணையர் மகன் நவீன் ராஜ் குடிபோதையில் ஓட்டி வந்ததும், காரில் நண்பர்கள் யஸ்வந்த் ராஜா, அரவிந்த் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நவீன் ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments