ரூ.1800 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட 38 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்திய கடற்படை திட்டம்

0 5463

போர் கப்பல்களில் பயன்படுத்துவதற்காக 450 கிலோ மீட்டர் வரை பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் மேம்படுத்தப்பட்ட 38 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.

கடற்படைக்காக விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் போர் கப்பல்களில் இந்த ஏவுகணைகள் பொருத்தப்படும். 1800 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த கொள்முதலுக்கு, பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய ஆயுதமாக கருதப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள், ஏற்கனவே பல இந்திய கடற்படை போர் கப்பல்களில் நிறுவப்பட்டுள்ளன.

டிஆர்டிஒ மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments