ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய தடை? செய்திகளை தெளிவுபடுத்துமாறு சீனாவுக்கு ஆஸ்திரேலியா வலியுறுத்தல்

0 2447
ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய சீனா தடை விதித்ததாக செய்திகள் வெளியான நிலையில், அதனை தெளிவுபடுத்துமாறு ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய சீனா தடை விதித்ததாக செய்திகள் வெளியான நிலையில், அதனை தெளிவுபடுத்துமாறு ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.

சீனாவின் முன்னணி ஊடகங்களில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டிய ஆஸ்திரேலிய வணிகத்துறை அமைச்சர் சைமன் பிர்மிங்காம் (Simon Birmingham), நிலக்கரி இறக்குமதிக்கு தடை என வெளியாகும் செய்திகளை தெளிவுபடுத்துமாறு கூறியுள்ளார். ஒருவேளை அந்த தகவல் உண்மையாக இருந்தால், அது சர்வதேச வர்த்தக விதி மீறல் என்றும் அவர் குறிபிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீதான சர்வதேச விசாரணைக்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவு அளித்ததை தொடர்ந்து, ஆஸ்திரேலியா மீது வர்த்தக ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments