விவசாயிகள் போராட்டத்தால் தினமும் ரூ.3500 கோடி இழப்பு - வர்த்தக அமைப்பான அசோசம் தகவல்

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி, விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தால், 2400 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்க முடியாததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று விவசாயிகள் போராட்டம் காரணமாக நாளொன்றுக்கு 3500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக வர்த்தக அமைப்பான அசோசம் தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் மறியலில் ஈடுபடுவதால் சரக்குகளை கொண்டு செல்வதற்கான காலம் அதிகரித்து செலவு 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Comments