சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு..!

0 1272

வீட்டு உபயோகத்திற்கான மானியம் இல்லாத சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயுசிலிண்டர் விலையை மாதம்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.

டிசம்பர் மாதத்துக்கான மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை கடந்த 1ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது.அதன்படி, சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது.

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 610 ரூபாயில் இருந்து 660 ரூபாயாக உயர்ந்தது. இந்த நிலையில், வீட்டு உபயோக மானியம் இல்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments