45 நாட்களில் கசந்துபோன காதல்… இளம் பெண் தற்கொலை! சாதியால் சமாதியான சோகம்

0 31535

சென்னை தாம்பரம் அருகே காதல் மனைவியின் சாதியை சுட்டிக்காட்டி, 10 லட்ச ரூபாய் கொடுத்தால்தான் சேர்ந்து வாழுவேன் என கணவன் கூறியதால், திருமணமான நாற்பத்தைந்தே நாட்களில் இளம் பெண் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் பேச்சை கேட்காமல் காதலனின் ஆசை வார்த்தைகளை நம்பிச் சென்றதால் கஷ்டப்படுவதாக கூறி இளம் பெண் விபரீத முடிவை எடுத்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் கீரணிப்பட்டியைச் சேர்ந்த கற்பகம், தன்னுடன் கல்லூரியில் படித்த புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனூரைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியனை காதலித்து வந்துள்ளார். வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 45 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர்.

மகளைக் காணவில்லை என கற்பகத்தின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் அலெக்ஸ்பாண்டியனை திருமணம் செய்துகொண்டு சென்னை தாம்பரம் அருகே மணிமங்கலம் பகுதியில் வசிக்கிறார் என்றும் திருமண வயது நிரம்பியதால் தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் திங்கட்கிழமை கற்பகம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் கிடைத்துள்ளது. தங்களது மகளின் இறப்புக்கு அலெக்ஸ்பாண்டியனும் அவனது பெற்றோரும்தான் காரணம் என கற்பகத்தின் பெற்றோர் போலிசில் புகாரளித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன், கணவர் அலெக்ஸ்பாண்டியன் அவரது பெற்றோர் பேச்சைக் கேட்டுக் கொண்டு தன்னை சாதியைச் சுட்டிக்காட்டி திட்டுவதாக கற்பகம் போனில் அழுதபடி தெரிவித்ததாக அவரது பெற்றோர் கூறுகின்றனர்.

மேலும் “நீ தாழ்ந்த சாதி என்பதால் என் ஊருக்குள் தலைகாட்ட முடியவில்லை, எனவே வெளிநாட்டில் வேலை செய்யும் உன் அண்ணனை 10 லட்ச ரூபாய் அனுப்பச் சொல், வசதியான பெண் என்றாவது என் பெற்றோர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு ” எனக் கூறி அலெக்ஸ்பாண்டியன் கற்பகத்தை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் தங்களது புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திங்கட்கிழமை மதியம் சுமார் 12 மணிக்கு பெற்றோரை போனில் அழைத்த கற்பகம், நான் உங்கள் பேச்சைக் கேட்காமல் அலெக்ஸ்பாண்டியனின் ஆசை வார்த்தைகளை நம்பி வந்தது தவறு என்று உணர்கிறேன் என்றும் கணவன் மற்றும் அவனது குடும்பத்தாரிடமிருந்து என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என கற்பகம் கதறி அழுததாகவும் அப்போது அவரிடம் இருந்து போனை அலெக்ஸ்பாண்டியன் பிடுங்கிக் கொண்டதாகவும் கற்பகத்தின் பெற்றோர் கூறுகின்றனர்.

அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அலெக்ஸ்பாண்டியனைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றன

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments