சென்னை கிண்டியில் டீக்கடையில் கியாஸ் கசிந்து வெடி விபத்து... கடை உரிமையாளர் உயிரிழப்பு

0 1288
சென்னை கிண்டியில் டீக்கடையில் கியாஸ் கசிந்து வெடி விபத்து... கடை உரிமையாளர் உயிரிழப்பு

சென்னை கிண்டியில் உள்ள டீ கடையில் கேஸ் கசிந்து தீ விபத்து நேரிட்டதும், கடை உரிமையாளர் உடலில் தீப்பிடித்தபடி பதைபதைப்புடன் அங்குமிங்கும் நடமாடிய காட்சிகளும் வெளியாகியுள்ளன.

கேரளாவை சேர்ந்த 55 வயதான மோகன், நேற்று முன்தினம் அதிகாலை கடையை திறந்து அடுப்பை பற்ற வைத்தபோது ஏற்கெனவே கசிந்த கியாசினால் தீ பிடித்து வெடித்து சிதறியது.

கடையிலிருந்த பொருள்கள் தூக்கி எறியபட்டதோடு, அவரும் அலறியடித்தபடி ஓடி வந்து கீழே அமர்ந்த நிலையில் உடலில் பிடித்த தீயை அணைக்க முயன்றார்.

அவ்வழியே மோட்டார் சைக்கிளில் ஒருவர் வரவே, அவரிடம் உதவி கேட்டு ஓடினார். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கண்டுகொள்ளாமல் செல்லவே, தனது கைகளாலேயே தட்டிதட்டி தீயை அணைத்தார்.

சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தபோதும், இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments