இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் பங்கேற்பதாக அறிவிப்பு

0 1008

வருகிற ஜனவரி மாதம் நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் பயணமாக, டெல்லி வந்துள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார்.

அப்போது, ஜனவரி மாதம் இந்திய குடியரசு தின விழாவில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்பார் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்தார்.

குடியரசு தின விழாவில், இங்கிலாந்து பிரதமர் பங்கேற்பது என்பது, புதிய சகாப்தத்தின், முக்கிய அடையாளமாகும் என ஜெய்சங்கர் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments