ரஷ்யாவில் முதியோர் காப்பகத்தில் திடீர் தீ விபத்து... 11 முதியோர் உடல்கருகி பலி

0 641

ரஷ்யாவில் முதியோர் காப்பகத்தில் நேரிட்ட தீ விபத்தில் வயது முதிர்ந்த 11 பேர் உடல்கருகி பலியாகினர்.

பாஷ்கோர்டோஸ்தான் பிராந்தியம் இஸ்புல்டினோ கிராமத்தில் உள்ள மர கட்டிடத்தில் காப்பகம் செயல்பட்டு வந்தது. அங்கு திடீரென நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில், எழுந்து நடக்க முடியாத நிலையிலிருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

காப்பக ஊழியர் உள்ளிட்ட 4 பேர் உயிர் தப்பினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments