அரசியல் கட்சி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் -ரஜினி மக்கள் மன்றம்

0 3308
கட்சியின் பெயர், சின்னம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள்

ரஜினி தொடங்க உள்ள கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை  காத்திருக்கும்படி, அவரது ரசிகர் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் ரஜினி கட்சி பதிவாகியிருப்பதாகவும், அந்தக் கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தல் ஆணைய ஆவணத்தை சுட்டிக்காட்டி தகவல் வெளியானது.

இந்நிலையில், மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் காத்திருக்கும்படி அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments