சேலத்தில் 20 பேர் சென்ற மினி லாரி, சரக்கு லாரியுடன் மோதி விபத்து; 4 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழப்பு

0 2411
விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி ஜியோவுக்கு நெருக்கடி

சேலம் விமான நிலையம் அருகே 20 கூலித்தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி லாரியும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

எடப்பாடியை சேர்ந்த 20 கூலித்தொழிலாளர்கள் தீவட்டிபட்டியில் சாலை பணிகள் செய்வதற்காக மினி லாரியில் சென்றுள்ளனர். விமான நிலையம் அருகே குப்பூர் பிரிவு சாலையில் மினி லாரி சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் மினி லாரியை வலதுபுறமுள்ள கட்டிங் வழியாக எதிர்திசை சாலைக்கு திருப்பியுள்ளார்.

அப்போது அந்த வழியாக சேலம் நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு லாரியுடன் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் எடப்பாடியை சேர்ந்த மெய்வேல் மற்றும் அவரது 4 வயது பேரன் மணிகண்டன் ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சேலம் மற்றும் ஓமலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments