மெரீனாவில் 900 தள்ளுவண்டி கடைகளை ஒதுக்கீடு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதியை சென்னை உயர் நீதிமன்றம் நியமனம்

0 773

மெரீனாவில் 900 தள்ளுவண்டி கடைகளை ஒதுக்கீடு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள, ஓய்வுபெற்ற நீதிபதியை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

மெரீனாவில் ஏற்கனவே இருந்த கடைகளுக்கு மாற்றாக புதிய கடைகளுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 6ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஒதுக்கீட்டு பணிகளை ஜனவரி 20 மற்றும் 21ஆம் தேதிகளில் மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதிகள், அதற்கு பொறுப்பாக ஓய்வுபெற்ற சதீஷ்குமார் அக்னிஹோத்ரியை நியமித்தனர்.

900 கடைகளில் ஒதுக்கீடு கிடைக்காதவர்களுக்கு, வேறு தகுந்த இடங்களை மாநகராட்சி கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ் சாலை, நடைமேம்பாலம் அமைக்க மத்திய அரசு விரைந்து முடிவெடுக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments