விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி ஜியோவுக்கு நெருக்கடி : வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் மீது ரிலையன்ஸ் ஜியோ புகார்

0 12901
விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி ஜியோவுக்கு நெருக்கடி : வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் மீது ரிலையன்ஸ் ஜியோ புகார்

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் நெறியில்லாத வகையில் பிரச்சாரம் செய்து ஜியோ இணைப்பை தங்களது நிறுவனங்களுக்கு மாற்றும் செயலில் வோடபோனும், ஏர்டெல்லும் ஈடுபடுதாக ரிலையன்ஸ் புகார் தெரிவித்துள்ளது.

டிராய் எனப்படும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ரிலையன்ஸ்  புகார் கடிதம் அனுப்பி உள்ளது.

அதில், புதிய வேளாண் சட்டங்களால், ரிலையன்ஸ் போன்ற பெருநிறுவனங்களுக்குத் தான் லாபம் என்ற வகையில் இந்த இரண்டு நிறுவனங்களும் பிரச்சாரம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது பணியாளர்கள், முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலம் தொடர்ந்து இது போன்று பிரச்சாரம் செய்து போர்ட்டபிளிட்டி மூலம் ஜியோ வாடிக்கையாளர்களை அவர்கள் நெட்வொர்க்கிற்கு இழுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வோடபோனும், ஏர்டெல்லும் இந்த குற்றச்சாட்டை மறுத்து டிராய்க்கு பதில் அனுப்பியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments