கொரோனா அச்சுறுத்தலால் குளிர்கால கூட்டத் தொடர் ரத்து- மத்திய அரசு

கொரோனா அச்சுறுத்தலால் குளிர்கால கூட்டத் தொடர் ரத்து- மத்திய அரசு
கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தவிர்ப்பதற்காக குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் கேட்டுக் கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
குளிர்கால தொடர் ரத்தாவதால் இனி நேரடியாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பரில் மழைக்கால கூட்டத் தொடர் முடிவுற்றது.
அடுத்த 6 மாதங்களுக்குள் அவையை கூட்டினால் போதும் என்பதால், குளிர்கால கூட்டத் தொடர் நடத்தப்படவில்லை.
#Parliament: No #WinterSession due to pandemic, Budget Session to take place in January, says Centre https://t.co/iTDFAfuGmR
— scroll.in (@scroll_in) December 15, 2020
Comments