டிசம்பர் 17-ல் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது..!

0 744
டிசம்பர் 17-ல் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது..!

தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ் - 1, பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் மூலம் சுற்றுவட்டப் பாதையில் வரும் 17ஆம் தேதி செலுத்தப்பட உள்ளது.

பருவநிலையைப் பொறுத்து, வரும் 17ஆம் தேதி பிற்பகல் 3.41 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இறுதிக் கட்ட ஆயத்தப் பணிகளுக்கான கவுன்ட்-டவுன் நாளை தொடங்க உள்ளது. இது பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 52ஆவது பயணம் ஆகும். இதன் மூலம் செலுத்தப்படும் சிஎம்எஸ் - 1 செயற்கைக்கோள், தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட தகவல் தொடர்புக்கு பயன்படக் கூடியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments