நடத்தையில் சந்தேகப்பட்டு கர்ப்பிணி மனைவியை கருச்சிதைவுக்கு ஆளாக்கி கொலை செய்த கணவனுக்கு தூக்கு தண்டனை - தேனி நீதிமன்றம்

நடத்தையில் சந்தேகப்பட்டு கர்ப்பிணி மனைவியை கருச்சிதைவுக்கு ஆளாக்கி கொலை செய்த கணவனுக்கு தூக்கு தண்டனை - தேனி நீதிமன்றம்
தேனியில் நடத்தையில் சந்தேகப்பட்டு, ஆறு மாத கர்ப்பிணி மனைவியை கருச்சிதைவுக்கு ஆளாக்கி, தாலி கயிற்றால் கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்த கணவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சின்னமனூரை சேர்ந்த சுரேஷ் என்பவன், ஆறு மாத கர்பிணியாக இருந்த மனைவி கற்பகவள்ளியை நடத்தையில் சந்தேகப்பட்டு தூங்கி கொண்டிருந்த போது கொடூரமாக தாக்கி கொலை செய்தான்.
அடிவயிற்றிலும், பிறப்புறுப்பிலும் தாக்கப்பட்டதில் ஆறு மாத சிசு உயிரிழந்தது. 2015-ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, தேனி மாவட்டக் கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபணமானதால், குற்றவாளி சுரேஷை சாகும்வரை தூக்கிலிட உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments