நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர், 3 விசைப் படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைது

0 2768
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர், 3 விசைப் படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைது

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் துரத்தி மடக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 22 மீனவர்களை, 3 விசைப் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

அதுதொடர்பான காட்சிகளை மீனவர்கள் சிலர் தங்களது செல்போன்களில் பதிவு செய்துள்ளனர்.

அதிநவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், தங்களை விரட்டியடித்ததோடு, துப்பாக்கிமுனையில் 22 பேரை கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இரவோடு இரவாக மீன் பிடிக்காமல் கரை திரும்பியதாகவும், ஒரு படகுக்கு சுமார் 70 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டடுள்ளதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments