அமெரிக்காவில் பல சோதனைகளுக்கு பிறகு ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது- ஜோ பைடன்

அமெரிக்காவில் பல சோதனைகளுக்கு பிறகு ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது- ஜோ பைடன்
அமெரிக்காவில் ஜனநாயகம் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படுத்தப்படாலும் இறுதியில் அது வெற்றி பெற்றுள்ளதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.
அதிபர் தேர்தல் குழுவினர் நேற்று கூடி அவரது வெற்றியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த நிலையில், டேலாவாரில் உள்ள வில்மிங்டனில் பேசிய பைடன்,அமெரிக்காவில் ஜனநாயகம் உறுதியுடன் இருப்பதாக கூறினார் டெக்சாஸ் போன்ற முக்கிய மாநிலங்களில் தமது வெற்றியை எதிர்த்து குடியரசுக் கட்சி எம்பிக்களும், அதிகாரிகளும் வழக்கு தொடுத்து தமது வெற்றியை திசை திருப்ப முயன்றதாகவும் ஜோ பைடன் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவில் சட்டத்தின் ஆட்சியும்,அரசியலமைப்பும்,மக்களின் விருப்பமும் மட்டுமே நீடித்து நிற்கும் என்பதை அதிபர் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் ஜோ பைடன் கூறினார்.
Comments