ரயில்வேயில் காலியாக உள்ள 1.4 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை- ரயில்வே துறை

ரயில்வேயில் காலியாக உள்ள 1.4 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை- ரயில்வே துறை
ரயில்வேயில் காலியாக இருக்கும் 1.4 லட்சம் காலி இடங்களை நிரப்புவதற்கு மிகப்பெரிய அளவிலான ஆள் எடுக்கும் பணியை ரயில்வே தொடங்கியுள்ளது.
இன்று முதல் 18ம் தேதி வரை முதல்கட்டமாக சில குறிப்பிட்ட பதவிகளுக்கும், அமைச்சரகத்திலுள்ள பதவிகளுக்கும் எழுத்து தேர்வு நடத்துகிறது. இதையடுத்து 28ம் தேதி முதல் 2021ம் ஆண்டு மார்ச் வரை தொழில்நுட்பம் சாராத பதவிகளுக்கும், லெவல் 1 அடிப்படையிலான பதவிகளுக்கு 2021 ஜூன் வரையிலும் தேர்வு நடத்துகிறது.
21 ரயில்வே வாரியங்கள் மூலமாக இந்த மிகப்பெரிய ஆள் எடுக்கும் பணியை இந்திய ரயில்வேத்துறை மேற்கொண்டுள்ளது. இதற்காக 2.44 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Comments