விவசாயிகளின் போராட்டத்தில் அன்னா ஹசாரே பங்கேற்க மாட்டார் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

0 1110
விவசாயிகளின் போராட்டத்தில் அன்னா ஹசாரே பங்கேற்க மாட்டார் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

விவசாயிகளுக்கு எதிரான எந்த அம்சங்களும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களில் கொண்டுவரப்படவில்லை என்பதால், அவர்களின் போராட்டத்த்தில் சமூக செயற்பாட்டாளரான அன்னா ஹசாரே கலந்து கொள்ளமாட்டார் என கருதுவதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறிய அவர்,போராட்டம் நடத்தும் விவசாயிகள் பேச்சுவார்த்தை மூலம் தங்களது குறைகளை தீர்த்துக் கொள்ள முன்வரவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

விவசாயிகள் தங்களது விளைபொருட்களை தாங்கள் விரும்பும் சந்தைகளிலோ, வர்த்தகர்களிடமோ, எங்கு வேண்டுமானாலும்  விற்றுக் கொள்ள வேளாண் சட்டங்களில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கட்கரி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments