தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்து கடந்த 5 நாட்களுக்கு மேலாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டிய பகுதியில் காற்றின் சுழற்சி நிலவி வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
Comments