மத்தியப் பிரதேச தேசியப்பூங்காவில் சுற்றுலா பயணிகளை தாக்க முயன்ற புலி

0 1227
மத்தியப் பிரதேச தேசியப்பூங்காவில் சுற்றுலா பயணிகளை தாக்க முயன்ற புலி

மத்தியப் பிரதேசத்தில் வனப்பகுதிக்குள் வாகனத்தில் சென்றவர்களை புலி ஒன்று ஆக்ரோஷமாக தாக்குவதற்கு முயன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

அங்குள்ள பந்தாவ்கர் தேசியப் பூங்காவில் சில சுற்றுலா பயணிகள் திறந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது புதரில் மறைந்திருந்த புலி ஒன்று திடீரென உறுமிக்கொண்டு அவர்களைத் தாக்க முயன்றது. இதனைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் பயத்தில் கத்தவே, வனத்துறையினர் சப்தமிட்டு புலியை விரட்டினர்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments