தமிழ்நாட்டில் 2,391 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை- கல்வித்துறை அலுவலர்கள்

0 944
தமிழ்நாட்டில் 2,391 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை- கல்வித்துறை அலுவலர்கள்

மிழ்நாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை கணக்கெடுக்கும் பணியை கல்வித்துறை அலுவலர்கள் மேற்கொண்டிருந்தனர். இதில், தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

இந்த பள்ளிகளின் பட்டியலை பள்ளிக் கல்வித்துறையிடம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே, இந்த பள்ளிகளில் கழிப்பறை வசதியை உருவாக்க, அப்பள்ளிகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை, இட வசதி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அனுப்புமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments