சேலத்தில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி; 2பெண்கள் உள்பட 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

0 1119
சேலத்தில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி; 2பெண்கள் உள்பட 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

சேலத்தில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 6 பேருக்கு கோவை டான்பிட் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

சூரமங்கலத்தில் ஜெய் ஈமு பார்ம்ஸ் நிறுவனம் நடத்தி 73 பேரிடம் 2கோடியே 33 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் ரஞ்சித், ராதா, ராஜா என்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதே போல் சங்ககிரியில் 374 பேரிடம் 5கோடியே 62 லட்சம் மோசடி செய்ததாக ராஜா, சசிகலா, ரஞ்சித்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோயம்புத்தூர் டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments