வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் முறையில் வாக்களிக்கும் வசதி..!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் முறையில் வாக்களிக்கும் வசதி..!
மக்களாட்சி நடைபெறும் வெளிநாடுகளில் வசித்துவரும் இந்தியர்களுக்கு, முதலில் தபால் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெளியுறவு அமைச்சகத்துடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்களையும் தேர்தலில் வாக்களிக்க வைக்க தயாராக உள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அதன்படி, முதற்கட்டமாக அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு, தபால் முறையில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
Comments