பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜா ரஞ்சித்சிங்கின் சிலை மீண்டும் உடைப்பு

0 1802
பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜா ரஞ்சித்சிங்கின் சிலை மீண்டும் உடைப்பு

பாகிஸ்தானில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜா ரஞ்சித்சிங்கின் சிலை மீண்டும் உடைக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.

லாகூரில் உள்ள ஷாஹி கிலா என்ற அரண்மனையில் சீக்கியர்களின் அரசர் ரஞ்சித் சிங்கின் 9 அடி உயர வெண்கலச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் அருங்காட்சியகத்தில் நுழைந்த சிலர், ஏராளமான இஸ்லாமியர்களை ரஞ்சித்சிங் கொன்றதாகக் கூறி அவரது சிலையின் கை உள்ளிட்ட பகுதிகளை அடித்து உடைத்தனர்.

இதே சிலை கடந்த ஆண்டும் அடித்து உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments