கடலூரில் தீக்குளித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி பிரமுகர் பலி

0 156

சிறையிலடைக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி, கடலூரில் தீக்குளித்த அக்கட்சியின் கிளைச் செயலாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட வேல்முருகன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேல்முருகனை விடுதலை செய்யக் கோரி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் கடலூர் பெரியாண்டிகுழி கிளை செயலாளரான ஜெகன், நேற்று ஊர்மக்கள் முன்னிலையில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெகன், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments