11 ஏக்கரில் "மியாவாக்கி" முறையில் 70 ஆயிரம் மரங்களுடன் அடர் காடு ... மரம் ஒரு வரம்... அடர்காடு சொல்லும் பாடம்

0 3775

11 ஏக்கர் நிலத்தில் "மியாவாக்கி" முறையில் இடைவெளி இல்லா 70 ஆயிரம் மரங்களை நட்டு, ஈரோடு இளம் தொழிலதிபர் ஒருவர் அடர் காட்டை உருவாக்கி, சாதனை படைத்துள்ளார். மரம் ஒரு வரம் என்பதை விளக்குகிறது, இந்த சிறப்புச் செய்தித்தொகுப்பு.

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் ! - ஊர்கள் தோறும் காடுகள் உருவாக்குவோம் ! என வலியுறுத்தும் இயற்கை ஆர்வலர்கள், காடுகள் நாட்டின் கண்கள் என வர்ணிக்கிறார்கள்,

ஈரோட்டைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் இளங்கவி என்பவர், ரயில்வே நிர்வாகத்திற்குச் சொந்தமான 11 ஏக்கர் நிலத்தை அனுமதி பெற்று, சீரமைத்து, உரமிட்டு, தன்னார்வத் தொண்டு நிறுவன உதவியுடன் 70 ஆயிரம் மரங்களை வளர்த்து, சாதனை படைத்துள்ளார்.

இந்த அடர்காட்டில், நாட்டு மரங்களான ஆல மரம், அரச மரம், வேம்பு, புங்கன், மா மரம், பனை மரம், புளியமரம், விளா மரம் என 40-க்கும் மேற்பட்ட மர வகைகள் இடம்பெற்றுள்ளன, இதுதவிர,கொய்யா, நெல்லிக்காய், பப்பாளி மரம், சப்போட்டா மரம், நாவல் மரம், மாதுளை என 10-க்கும் மேற்பட்ட பழ மரங்களும் அழகிய பூஞ்செடிகளும் "மியாவாக்கி" முறையில் இடைவெளி இல்லாமல் ஒரு அடர் காடாக உருவாகி உள்ளது.

மனிதன் இல்லாமல் மரங்கள் வாழ முடியும் - ஆனால், மரங்கள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. காசு கொடுத்து குடிதண்ணீர் வாங்கும் சூழல் உருவாகி உள்ள சூழலில், எதிர்காலத்தில் சுத்தமான காற்றுக்கும் பொதுமக்கள் காசு கொடுக்கும் நிலை உருவாகும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.

எனவே, ஈரோடு இளம் தொழிலதிபர் இளங்கவி போல, ஊருக்கு ஒருவர் உருவானால், நிச்சயம் மரங்கள் வரம் தரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments