கர்நாடக போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டம் வாபஸ்; போக்குவரத்து இன்று தொடக்கம்

0 1888
கர்நாடக போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டம் வாபஸ்; போக்குவரத்து இன்று தொடக்கம்

கர்நாடகாவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் இன்று முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

தங்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று கோரி 11ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்ட நிலையில் பேருந்துகள் இயங்காமல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் பொதுமக்கள் உள்பட பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

பின்னர் ஊழியர்களின் கோரிக்கைகளில் அரசுப் பணியாளராக்குவது என்பது தவிர்த்து 9 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக துணை முதலமைச்சர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டு இன்று பேருந்துகள் இயங்கத் தொடங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments