அமெரிக்காவில் 205 டாலர் பில்லுக்கு 5 ஆயிரம் டாலர் டிப்ஸ் வழங்கி அசத்தல்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உணவு விடுதி ஒன்றில் பணியாற்றிய மாணவிக்கு வாடிக்கையாளர் ஒருவர் 5 ஆயிரம் டாலரை அன்பளிப்பாக வழங்கி உள்ளார்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உணவு விடுதி ஒன்றில் பணியாற்றிய மாணவிக்கு வாடிக்கையாளர் ஒருவர் 5ஆயிரம் டாலரை அன்பளிப்பாக வழங்கி உள்ளார்.
Broomalla பகுதியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நர்சிங் படிப்பு படிக்கும் மாணவி ஒருவர் பகுதி நேர பணியாளராக பணி புரிந்து வருகிறார்.
வழக்கம் போல் அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவினை பரிமாறி விட்டு, அதற்கு கட்டணமாக 205 டாலர் ரசீதை வழங்கி உள்ளார் அந்த மாணவி.
அதனை பெற்றுக் கொண்ட வாடிக்கையாளரோ 205 டாலர் கட்டணத்துடன், மாணவிக்கு டிப்சாக 5ஆயிரம் டாலரையும் வழங்கினார். இதற்காக அந்த உணவு விடுதி நிர்வாகம் தனது முகநூலில் அவருக்கு நன்றி தெரிவித்து உள்ளது.
Comments