அமெரிக்க அதிபராக அடுத்த மாதம் பதவியேற்கிறார் ஜோ பைடன்

0 1137
அமெரிக்க அதிபர் தேர்தலில் எலக்டோரல் கொலேஜ் எனப்படும் தேர்வாளர் குழுவில் ஜோ பைடன் 270 வாக்குகள் பெற்றிருப்பதால் அதிபராக அறிவிக்கப்பட உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் எலக்டோரல் கொலேஜ் எனப்படும் தேர்வாளர் குழுவில் ஜோ பைடன் 270 வாக்குகள் பெற்றிருப்பதால் அதிபராக அறிவிக்கப்பட உள்ளார்.

அனைத்து மாகாண முடிவுகளும் வெளியாகி வரும் நிலையில் அதனை ஏற்க தற்போதைய அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்ததால் சிக்கல் நீடித்தது.

இந்நிலையில் மாகாணங்களில் பதிவான வாக்குகள் மற்றும் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்களை எலக்டோரல் கொலேஜிடம் ஆளுநர்கள் சமர்ப்பித்து வருகின்றனர்.

இந்த முடிவுகள் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்திற்கு அனுப்பப்பட்டு அடுத்த மாதம் 6ம் தேதி அடுத்த அதிபராக பைடன் அறிவிக்கப்படுகிறார்.

இந்த நிலையில் 538 வாக்குகளில் பெரும்பான்மைக்குத் தேவையான 270 வாக்குகளை பைடன் தற்போதே பெற்று விட்டதால் அவரது வெற்றி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments