ரஜினியின் புதிய கட்சி பெயர் மக்கள் சேவைக் கட்சி? பாபா முத்திரை சின்னம் கேட்கப்பட்டதாகத் தகவல்

0 10421
ரஜினியின் புதிய கட்சி பெயர் மக்கள் சேவைக் கட்சி? பாபா முத்திரை சின்னம் கேட்கப்பட்டதாகத் தகவல்

நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மக்கள் சேவைக் கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பெயர்ப்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த், இம்மாத இறுதியில் தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்தார். இந்நிலையில், மக்கள் சேவைக் கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 234 தொகுதிகளுக்கும் பொதுசின்னம் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பாபா படத்தில் இடம் பெற்ற ஹஸ்தா முத்திரை சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் ரஜினி தரப்பு கேட்டதாகவும், அந்தச் சின்னம் ஒதுக்கப்படாததால், ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தவர் குறித்த விபரம் வெளியாகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments