வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நாளை முதல் மூன்று நாள்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இது மேற்கு நோக்கி நகர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 3 நாட்களுக்கு மிதமான மழையும் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Comments