டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; நோயாளிகள் கடும் அவதி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; நோயாளிகள் கடும் அவதி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் 5 ஆயிரம் செவிலியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
6வது ஊதியக் குழு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி 16ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக எய்ம்ஸ் செவிலியர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை சுகாதாரத்துறையும், எய்ம்ஸ் நிர்வாகமும் ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஒப்பந்த அடிப்படியில் செவிலியர் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வரும் புதன்கிழமைக்கு முன்னதாக நேற்றே அவர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
Comments