உள் சேமிப்பு ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையே யுடியூப், ஜிமெயில் உள்ளிட்ட சேவைகள் முடக்கத்திற்கு காரணம் - கூகுள் விளக்கம்

உள் சேமிப்பு ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையே யுடியூப், ஜிமெயில் உள்ளிட்ட சேவைகள் முடக்கத்திற்கு காரணம் - கூகுள் விளக்கம்
உள் சேமிப்பு ஒதுக்கீடு பிரச்னை காரணமாகவே சர்வதேச அளவில், தங்களது சேவை பாதிக்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் யூடியூப், ஜி மெயில், கூகுள் டிரைவ், மேப்ஸ் உள்ளிட்ட சேவைகள், நேற்று மாலை 45 நிமிடங்கள் வரை முடங்கின. இதனால், தனிநபர்கள், நிறுவனங்கள் என பல தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள் சேமிப்பு ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே, அங்கீகார அமைப்பு செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments