ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரான் தொழிற்சாலை, ஊழியர்களால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் : 160 பேர் கைது

0 1238
ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரான் தொழிற்சாலை, ஊழியர்களால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் : 160 பேர் கைது

பெங்களூரு அருகே ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனத்தை அடித்து நொறுக்கியதாக, 160 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நரசபுராவில் ஒப்பந்த அடிப்படையில் ஐபோன்களை தயாரிக்கும் நிறுவவனமான விஸ்ட்ரான், சம்பள பிரச்னையால் சில தொழிலாளர்களால் கடந்த சனிக்கிழமை அடித்து நொறுக்கப்பட்டது.

இதில், 438 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், பல ஐபோன்கள் திருடப்பட்டு உள்ளதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, தற்போது 7,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில் 5,000 பேர் அடையாளம் தெரியாத ஒப்பந்த ஊழியர்கள் எனவும், காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments