இந்தியா -வங்கதேசம் இடையே வருகிற 17ஆம் தேதி உச்சி மாநாடு- வெளியுறவு அமைச்சகம் தகவல்

இந்திய - வங்கதேச பிரதமர்களிடையே வருகிற 17ஆம் தேதி உச்சி மாநாடு நடைபெறவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்திய பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இடையே வருகிற 17ந் தேதி இணையவழி உச்சி மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் கொரோனாவிற்கு பிந்தைய காலத்தில் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடல் நடத்துவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
A virtual summit will be held between PM Modi and Prime Minister of Bangladesh Sheikh Hasina on 17th December. The two leaders will hold comprehensive discussions on the bilateral relationship, including further strengthening cooperation in the post COVID era: MEA
— ANI (@ANI) December 14, 2020
(file photo) pic.twitter.com/92M5IVT5Ml
Comments