சபரிமலையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 18 போலீசார் உள்பட 36 பேருக்கு கொரோனா

0 2026
சபரிமலையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 18 போலீசார் உள்பட 36 பேருக்கு கொரோனா

பரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 220ஆக உயர்ந்துள்ளது.

அங்கு சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், ஒரே நாளில் 18 போலீசார் உள்பட 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் ஓட்டல்களில் வேலை செய்து வந்த 7 பேருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து சபரிமலையில் இதுவரை 220-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ள தேவஸ்தான நிர்வாகம் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments