சித்ரா தற்கொலையில் கணவன் ஹேம்நாத் கைது

0 31466
சித்ரா தற்கொலையில் கணவன் ஹேம்நாத் கைது

சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நசரத்பேட்டை அருகே விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து உடனிருந்த கணவன் ஹேம்நாத், வில்லா ஊழியர்கள், படப்பிடிப்பில் பங்கேற்றவர்கள், சித்ராவின் பெற்றோர், மாமனார் என பலதரப்பினரிடமும், சித்ரா தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களிடமும் விசாரணை நடைபெற்றது. தன் மகளை ஹேம்நாத் அடித்துக் கொன்றதாக சித்ராவின் தாயார் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஹேம்நாத்திடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டிருந்த நசரத் பேட்டை போலீசார் அவரை நேற்று இரவு கைது செய்தனர். சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரைக் கைது செய்தவர்கள் அவர் மீது 306வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, திருமணமாகி சில மாதங்களிலேயே சித்ரா உயிரிழந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணையை தொடங்கினார். நடிகை சித்ராவின் தந்தை காமராஜ், தாயார் விஜயா, அண்ணன் சரவணன்,சகோதரி சரஸ்வதி ஆகியோரிடம் அவர் விசாரணை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments